தங்களின் குழந்தைக்கு இன்னது என்று உணர்ந்துகொள்ள முடியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோரில் ஒருவருக்காவது இப்புத்தகம் பயன்பட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். சரி, என் குழந்தை நல்லா இருக்கு. நோ ப்ராபளம் என்பவரா நீங்கள்.. அப்படியெனில்.. நீங்களும் தான் எங்களின் இலக்கு. குறைவான ஆட்டிசப்பாதிப்பு உள்ள குழந்தைகளையும், அதிலிருந்து மீண்டுவரும் குழந்தைகளையும் சிறப்பு பள்ளிகளுக்கு அனுப்பவேண்டாம், சாதாரணப்பள்ளிகளுக்கு அனுப்புங்கள் என்று மருத்துவர்களும், தெரபிஸ்டுகளும் வலியுறுத்துகின்றனர். ஆனால், இக்குழந்தைகளை பெரும்பாலான பள்ளிகள் சேர்த்துக்கொள்ள மறுத்துவிடுகின்றன. அதற்கு பள்ளி சொல்லும் காரணம், தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது வந்துவிடுமோஎன்று மற்ற பெற்றோர் பயப்படுவதாக சொல்கிறது. தொட்டுவிட்டால் ஒட்டிக்கொள்கின்ற தொற்று நோய் அல்ல ஆட்டிசம். சாதாரணக்குழந்தையின் பெற்றோராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், ஆட்டிசக்குழந்தைகளை ஒதுக்கவேண்டாம், அவர்களையும் நாம் இயல்பு வாழ்க்கையை வாழவழி செய்ய முடியும். இவர்களுக்கான உரிமையை மறுப்பவரிடம் இக்குழந்தைகளின் சார்பில் நீங்களும் வாதிடமுடியும்.அதற்கு இப்புத்தகம் துணைநின்றால் உள்ளபடியே மகிழ்வோம்.
கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூக செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர். ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, ஆட்டிசம் விழிப்புணர்வுக்காகவும் சிறார் இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.
Be the first to rate this book.