ஆஸ்திரேலியா நாட்டின் நிலவியல், அரசியலமைப்பு, வரலாறு, தொல் குடிகள், மாநகர்கள், பறவைகள், விலங்குகள், கல்வி நிறுவனங்கள், தொழில் களங்கள், உணவு, பொருளாதாரம், இந்திய – ஆஸ்திரேலியத் தொழில் உறவுகள், அங்கு வாழும் தமிழர்கள் என ஏராளமான தகவல்களைத் திரட்டி இந்நூலை ஒரு செய்திக் களஞ்சியமாக அருணகிரி தந்திருக்கிறார். இவரது கடும் உழைப்புப் பாராட்டுக்குரியது.
அருணகிரிக்கு எளிய, இனிய, வளமான தமிழ்நடை வாய்த்திருக்கிறது. அதனால் பாரதிதாசனைப் பற்றிச் சுரதா குறிப்பிட்டதைப் போல, ‘தடை நடையே இவர்க்கில்லை – வாழைத் தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு?’ என்று நிச்சயமாக வியந்து பேசலாம்.
Be the first to rate this book.