ஒளரங்கசீப் மதசகிப்புத் தன்மையற்றவர், கோயில்களை இடித்தவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், எத்தகைய சந்தர்ப்பங்களில் அப்படியான காரி;யங்களை அவர் செய்ய நேர்ந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை. பல இந்துக் கோயில்களுக்கு - சோமேஸ்வரநாத மகாதேவ கோயில்(அலகாபாத்), ஜங்கம்பதி கோயில்(காசி), உமானந்த் கோயில்(கவுஹாத்தி), போன்றவற்றுக்கு அவர் மானியங்கள் வழங்கியதை ஏனோ வரலாற்றாளர்கள் வெளிப்படுத்தாமல் இருந்து விட்டனர். ஒளரங்கசீப்பின் போர்கள், ஆட்சிமுறை, எளிய வாழ்க்கை இவற்றில் இருந்து இன்றைய ஆட்சியாளர்களும் மக்களும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பல்வேறு மதத்தவரும் இனத்தவரும் வாழ்கின்ற இந்த நாட்டில், சமுதாய நல்லிணக்கத்தின் அவசியத்தை இந்நூல் வலியுறுத்துகிறது என்று இந்நூலின் ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் தனது முன்னுரையில் இந்நூலைப் பற்றி குறிப்பிடுகிறார்.
Be the first to rate this book.