கொள்கைத் தீவிரர்கள் பலர் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் இல்லை இது. ஒரே நபர். ஒரே இலக்கு. ஒரே கனவு. ஜப்பானை ஆளவேண்டும்! இந்தக் கனவுக்காக எத்தனை உயிர்களை பலிகொடுத்திருக்கிறார்கள் தெரியுமா?
ஷோகோ அசஹாரா ஒரு சாதாரண ஜப்பானியப் பிரஜை. ஏழைமையில் வாடிய குடும்பம். தவிரவும் ஒரு கண்பார்வை கிடையாது. அதனாலென்ன? தனது புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி, புதிதாக ஒரு மதத்தையே ஸ்தாபித்து, மக்களை மயக்கி வசப்படுத்தி, சம்பாதித்து, சம்பாதித்த அனைத்தையும் ஆயுதங்களாக மாற்றி, ஜப்பானில் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டவர்.
மேற்கு நாடுகளெல்லாம் அணு ஆயுதம் குறித்து யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ஷோகோவின் 'ஓம் ஷின்ரிக்கியோ', ரசாயன உயிரியல் ஆயுதங்களைத் தயாரித்து மிகப்பெரிய அழிவுகளை உண்டாக்கியிருக்கிறது.
ஜப்பானில் மட்டுமல்லாமல் ரஷ்யா முதல் ஆஸ்திரேலியா வரை, அமெரிக்கா முதல் பிலிப்பைன்ஸ் வரை தனது கிளைகளை விஸ்தரித்து, ஆன்மிகப் போர்வையில் இவர்கள் நிகழ்த்திஇருக்கும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல!
ஷோகோ அசஹாரா என்கிற ஒரு தனி மனிதனின் கனவுக்காக, ஜப்பான் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொடுக்க வேண்டிஇருந்தது! மதத் தீவிரவாதம் என்பது எத்தனை அபாயகரமானது என்பதை முதல் முதலில் உலகுக்கு அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்ன இயக்கம் ஓம் ஷின்ரிக்கியோ.
எடுத்தால், வைக்கமுடியாத அளவுக்கு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது.
Be the first to rate this book.