‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டுதல்கள் குறித்துக் கவலைப்படாத, பொது மக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது. ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலை ஆகியனவற்றின் மீது வன்முறைத் தாக்குதல்களை மக்கள் நிகழ்த்தினர். தமிழ்நாட்டில் இவ்வியக்கம் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை இச்சிறு நூல் தொகுத்துரைக்கிறது.
Be the first to rate this book.