இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆர்வம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் குறும்படம் ஒன்றை எடுத்து, மக்கள் பார்வைக்கு இணையத்தில் வெளியிடுவதற்கான வாய்ப்பு கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்தக் குறும் படங்களைச் சிறப்பாக எடுப்பதற்கு வழிகாட்டும் நூலாக வந்துள்ளது எஸ்.தேவராஜு எழுதி, ‘அது இப்படித்தான் - குறும்படத் தயாரிப்பு வழிகாட்டி’ என்ற நூல். ஒரு படத்தொகுப்பாளராக 45 வருட அனுபவம் பெற்ற தேவராஜு, குறும்படங்கள் எடுக்க முனையும் ஒருவர் செய்ய வேண்டியவற்றின் பட்டியலில், பத்திரிகைகளில் வெளியாகும் ஒரு பக்கக் கதைகளைப் படிப்பது போன்ற அடிப்படை யான விஷயங்களிலிருந்து தொடங்குகிறார். கிறிஸ்டோஃபர் நோலன், க்வெண்டி டொராண்டினோ போன்ற அயல்நாட்டுத் திரை மேதைகள் முதல் கார்த்திக் சுப்பாராஜ், உள்ளிட்ட கோடம்பாக்க சாதனை யாளர்கள் வரை பல முன்னணி இயக்குநர்களின் முதல் குறும்படங்கள் பற்றிய அறி முகமும் இதில் உள்ளது. மேலும், கி.ராஜ நாராயணின் புகழ்பெற்ற ‘கதவு’ சிறுகதையும் அதன் திரைக்கதை வடிவமும் கொடுக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பு.
- ச. கோபாலகிருஷ்ணன்
Be the first to rate this book.