வருடாந்தம் தீர்த்தமாடும் தெய்வங்கள் குடியிருக்கும் கோயில்களும் - பல்சுவை தரும் மாங்கனிகளைப் பெற்றெடுக்கும் மாஞ்சோலைகளும் பண்டிகைகளுக்குக் குறைவில்லாத இல்லங்களும் - கல்வி வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட டியூட்டரிகளும் - பாதுகாப்பு என்ற போர்வையில் முளைத்த இலங்கை - இந்திய இராணுவத்தின் காவலரண்களும் கொண்ட அன்றைய காலத்தை நேசத்துடனும் பரவசத்துடனும் வலிகளுடனும் இரைமீட்டுகிறார் கானா பிரபா. எப்படித்தான் அது இருந்தாலும் ‘அது எங்கட காலம்தான்’ என்று பேருவகையோடு தனது நினைவுச்சிறையில் பாதுகாத்த ஒவ்வொரு காட்சிகளையும் புள்ளிகளாக இட்டுக் கோலங்களாக வடிவமைக்கிறார். ஒவ்வொரு அங்கமும் எளிமையான வார்த்தைகளினூடே அந்த இறந்தகாலத்திற்கே எம்மை அழைத்துச் செல்கின்றது. இந்தப் பதிவுகள் வாசகர்களின் நெஞ்சத்துக்கு நெருக்கமானவையாகவே தொடர்ந்து வாழும். ஏனென்றால் அது கானா பிரபாவின் காலம் மட்டுமல்ல; அது எங்கட காலமாகவும் எம் நெஞ்சமதில் வாழ்கிறது.
- லெ.முருகபூபதி
Be the first to rate this book.