ஆய்வகக் கூண்டு வாழ்க்கையிலிருந்து தப்பித்து பதுங்கியும் நழுவியும் வாழும் ஒரு அழகிய வெண்பெண்ணெலி. பல அடுக்குப் பாதுகாப்பைக் கடந்து உள்நுழையும் வெளிப்புற ஆணெலி.
ஆய்வக இடுக்குகளில் ஒன்றையொன்று சந்தித்து காதலுறும் இரு எலிகளின் சரசங்கள், பிரிவுத் துயர்களின் காட்சிகள் இந்த நாவலில் இடையூடான கவிதையாகின்றன. மானுடம் நோய்களிலிருந்து மீள்வுற்று நலம் கொழிக்கும் வாழ்க்கை அடைய ஆய்வக எலிகள் அனுபவிக்கும் துயரங்களும், கொடுமைகளும், இங்கே உண்மை கொண்டு கனக்கின்றன.
ஆய்வகப் பாதுகாப்பு அடுக்குகள், ஆய்வகத் தூய்மை முறைகள், பெண்ணெலிகள் பூப்பெய்தி கருசுமக்கும் பருவங்கள், எலிகள் பற்றிய உலகளாவிய புராணக் கதைகள் என விரிவுகொள்கிறது இந்த அழகிய அறிவியல் புதினம்.
இது தமிழ் படைப்புக் களத்தில் ஒரு அரிதான நிகழ்வு.
Be the first to rate this book.