மேன்மையான எண்ணங்களால்தான் ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கை அமைகிறது. சக மனிதர்களையும் நேசித்து வாழ்வதாலேயே ஆனந்தம் பிறக்கிறது. நாம் பிறருக்கு வழிகாட்டியாக அமையும்போது நம் வாழ்க்கைக்கு அர்த்தம் புரிகிறது. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ''ஆசைப்படுங்கள்... உங்கள் ஆசைக் கனவுகள் நிறைவேற உங்கள் மனமும் உறுதியுடன் ஒத்துழைப்பு தரவேண்டும். உங்கள் மனமும் உடலும் நீங்கள் விரும்பியபடி செயலாற்ற வேண்டுமானால் அவற்றை உங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி வசப்படுத்திக் கொள்வதுதான் யோகா!'' | இப்படிக் கூறி வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை உணர்த்துகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். முந்தின தலைமுறைகள் காலங்காலமாக கடைப்பிடித்துவந்த கலாசாரம், பண்பாடு, சம்பிரதாயம் ஆகியவற்றில் புதிய சிந்தனைகளைப் புகுத்தி, வாழ்க்கையின் கடினப் பகுதிகளை எளிதாக்கி, தன் போதனைகளால் நமக்கு உற்சாகத்தை ஊட்டும் ஜக்கி வாசுதேவ், தடைகளை வென்று நினைத்ததை சாதித்துக் கொள்ளும் வழிமுறைகளை சுகமான வார்த்தைகளாக இந்தப் புத்தகத்தில் வழங்கியுள்ளார்.
Be the first to rate this book.