பேரற்புதங்களில் ஒன்றான பறவைகள் இயற்கையின் நுட்பமான சங்கிலிப் பின்னலின் பிரிக்க முடியாததொரு கண்ணி.
இப்புவியில் பறவைகளுக்கும் மரங்களுக்கும் தொடர்பிருக்கிறது. பறவைகளுக்கும் மலர்களுக்கும் தொடர்பிருக்கிறது. பறவைகளுக்கும் பயிர் விளைச்சலுக்கும், பறவைகளுக்கும் காடு பெருக்கத்திற்கும் கூட சம்பந்தம் இருக்கிறது.
பறவைகள் ஒரு நாளை எவ்வளவோ அழகாகத் துவங்குகின்றன. பறவைகளை ரசிக்கத் துவங்குவதே பறவையியலை அறிந்து கொள்வதற்கான முதல் எட்டு, இயல்பூக்கமான கூருணர்வுகளை இழந்துவிட்ட நமக்கு, பறவைகளின் உலகினை இந்நூல் அறிமுகம் செய்யும் போது அந்த இழப்பு ஒரு ஏக்கமாக மாறுகிறது.
பேராச்சரியங்களும் புதிர்களும் நிறைந்த பறவையியல், முகமது அலி அவர்களின் எழுத்தின் வழியாக முதல்முறையாக நமக்குக் கிடைக்கிறது. ”அதோ அந்தப் பறவை போல...” பறவையியலைப் பயில ஒரு ஒளிரும் மாணிக்கம், பொருளற்ற கூப்பாடுகளிலிருந்து விலகிய அறிவார்ந்த முயற்சிகளின் வெளிச்சம்.
Be the first to rate this book.