நறுந்தொகை என்னும் இந்த நூல், நல்ல அறக்கருத்துகளைத் தொகுத்துக்கூறும் நூல் என்னும் பொருள் கொண்டது. இந்த நூலின் பயனை எடுத்துக்கூறும் பாடல், வெற்றி வேற்கை எனத் தொடங்கும் காரணத்தால் இதனை வெற்றி வேற்கை என்றும் குறிப்பிடுகிறார்கள்.
வாழ்க்கையை மனிதன் எப்படி வாழவேண்டும் என்னும் கருத்துகளையும், செல்வம் நிலையற்றது, உலக வாழ்க்கை நிலையற்றது என்னும் உண்மைகளையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. எண்பத்திரண்டு பாடல்களைக் கொண்ட இந்த நூல் நல்ல அறவுரைத் தொகுதி ஆகும்.
Be the first to rate this book.