ஆலயங்கள் நிறைந்த ஆன்மிகத் தலம், பல்லவர்களின் தலைநகர், சிற்பம் - ஓவியக் கலைகளில் சிறந்து விளங்கும் நகரம்... இப்படி இன்னும் பல சிறப்புகளால் உலகம் அறிந்துவைத்திருந்த காஞ்சி நகரத்தை, நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர் தரிசன வைபவத்தால் நாடு முழுவதும் ஏன் உலகம் முழுதும் உற்றுநோக்கியது. இதற்கு முன்னும் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசன வைபவங்கள் நடந்தேறியிருந்தன. ஆனால், 2019-ம் ஆண்டு அத்திவரதர் தரிசன வைபவம் பற்றி, பத்திரிகை, தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களாலும் எல்லாவற்றுக்கும் மேலாக லட்சக்கணக்கில் திரண்டு வந்து அத்திவரதரை தரிசித்துச்சென்ற பக்தர்களாலும் வெகுவாக அறியப்பட்டது. அத்திவரதர் அவதார புராணம் பற்றியும், காஞ்சி மண்ணில் நிகழ்ந்த மகத்தான ஆன்மிக மகிமைகள் பற்றியும், நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் தரிசன நிகழ்வு பற்றியும், ஆளவந்தார் மகிமை, ராமாநுஜரின் திரு அவதாரம், ஆழ்வார்களை ஆதரித்து ஏற்ற அருளாளன் திருவிளையாடல்கள் என அனைத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் கண்ணன் கோபாலன்! மனதில் எண்ணும்போதே எல்லாம் அருளும் அத்திவரதர், புண்ணிய பூமியாம் காஞ்சியில் எடுத்த அவதார நிகழ்வை அறிந்துகொள்ள நகரேஷு காஞ்சிக்குள் நடைபோடுங்கள்!
Be the first to rate this book.