அதிகாரத்துக்கு சேவகம் செய்து கொண்டு, அதனிடமிருந்து வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் ஒருபோதும் விமர்சனப்பூர்வமான ஆய்வுகளில் ஈடுபடவோ, அதன்மூலம் ஒப்பீட்டளவிலான சுதந்திரத்தைப் பெறவோ மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அப்படி விமர்சனப்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டு ஆய்வது தான், அறிவுஜீவிகள் இந்த சமூகத்துக்குச் செய்யும் பங்களிப்பாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், அரசாங்கத்தின் அல்லது ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தின் கொள்கை இலக்குகளை அடைவதற்கு தன்னை அர்பணித்துக் கொண்டுள்ள, அதற்கு ஊழியம் செய்கிற ஒருவரை நாம் அறிவுஜீவி என்று கூறவே முடியாது. பெரும்பாலான அறிவுஜீவிகள் இத்தகைய கவர்ச்சிகளுக்கு பலியாகிவிடுகிறார்கள். ஓரளவுக்கு நாம் எல்லோருமே அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சுய சார்போடு இருப்பவர்கள் ஒருத்தருமில்லை.
- எட்வர்ட் ஸெய்த்
Be the first to rate this book.