கண்ணன் பத்திகளாகவும் தனிக் கட்டுரைகளாகவும் எழுதியவையே இந்நூலின் உள்ளடக்கம். 2005 முதல் 2011 வரையான காலப் பகுதியில் உலகிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்த அரசியல் நடவடிக்கைகளின் ஆதாரமான பண்புகளை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
ஆ.ராசா வேட்டையாடப்படுவது அவர் தலித் என்பதனால் என்பது ஒரு தற்காப்புவாதம். ராசாவை ஊழலுக்குத் தூண்டிவிட்டு அவரது சாதி அடையாளத்தைச் சுரண்டி ஆதாயங்கள் கொய்யப்படுகின்றன என்பது இந்நூலிலுள்ள புலனாய்வுக் குறிப்பு. தலித் அடையாளத்தை ஊழலில் புதைக்கும் அரசியலிலிருந்து மீட்பது ஒடுக்கப்பட்ட மக்கள் முன் இன்று இருக்கும் சவால் என்பது ஆசிரியர் கூற்று.
மதச்சார்பின்மை, மனித உரிமைகள், இடதுசாரிக் கண்ணோட்டம், கலை பண்பாடு, ஊடகங்கள், நடைமுறை அரசியல் என்று எல்லாத் தரப்புகளிலும் நிகழும் அரசியல் செயல்பாடுகளின் நுண் அரசியலை இனங் காட்டுகிறது இந்நூல். நோயையும் நோயின் மூலத்தையும் சுட்டுவதோடு அதைத் தீர்க்கும் மாற்று வழியையும் முன்வைக்கிறது என்பதே இந்த நூலின் பயன்மதிப்பு.
Be the first to rate this book.