கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார வட்டத்துக்குள் முதன்முதலில் வந்த தமிழ்ப் புலமையின் சுவடுகளைத் தேடிச் செல்கிறது இந்த ஆய்வு.
ஆங்கிலேயர்களின் இந்திய அறிவாராய்ச்சியில் தமிழும் கவனம் பெற்றது நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி என்னும் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியால்தான். இவர்தான் திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழிபெயர்த்தவர். அதிகம் பேசப்படாத இந்த அதிகாரியின் வாழ்க்கையையும், புலமைச் செயல்பாடுகளையும் இந்த ஆய்வு பதிவுசெய்கிறது.
தமிழ் இலக்கிய மரபு என்று எதைத் தன் புலமைக் கூட்டத்தார் மத்தியில் அவர் முன்னிறுத்தினார் என்பதை மையப்படுத்தி, அவருக்குப் பிறகு வந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் காலத்தில் அம்மரபு எவ்வாறு மாற்றமடைந்தது என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. காலனிய வட்டத்துக்குள் தமிழ்ப் புலமை எப்படி அதிகாரச் சொல்லாடலாக நிலைபெற்றது என்பதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.
Be the first to rate this book.