பரீஸ் வசிலியெவ் 1969-இல் எழுதிய குறுநாவல் ‘The Dawns Here are Quite’ ‘அதிகாலையின் அமைதியில்’. சோவியத் ஒன்றியத்தின் இராணுவத்தில் பணியாற்றிய இவர் தன்னுடைய போர்க்கள அனுபவங்கள் குறித்து எழுதிய முதல் நாவல் இது. இவரின் போர்க்கள அனுபவங்கள் மேலும் இரண்டு நாவல்களாக (‘Not on the Active List’, 1974; ‘Tomorrow There Came War’, 1984) எழுதப்பட்டுள்ளன என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கதே. பரீஸ் வசிலி யேவ் எழுதிய இரண்டாவது நாவலான ‘Don’t Shoot the White Swans’ (1973) ரஷ்ய மொழியில் முக்கியமான ஒரு படைப்பு.
‘அதிகாலையின் அமைதியில்’ உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதுடன் ரஷ்யாவில் இரண்டு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களால் எடுக்கப்பட்ட ‘பேராண்மை’ இந்நாவலின் பாதிப்பால் எடுக்கப்பட்டதென்பதை திரைப்படத்தின் தொடக்கத்தில் வரும் நன்றி அறிவிப்பால் அறியலாம்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில், போர் ஒழுங்குகளை மீறிய ஜெர்மானியர்களின் சதிச்செயலை ‘சார்ஜன்ட் மேஜர் வஸ்கோவ்’ தலைமையில் முறியடித்த சோவியத் ஒன்றியத்தின் இராணுவ சிப்பாய்களான ஐந்து இளம்பெண்களின் வீரத்தையும் தியாகத்தையும் வெளிப்படுத்தும் இந்நாவல்.
Be the first to rate this book.