உலக அளவில் நிலவும் அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் அதன் விளைவுகளையும் ஆய்வுசெய்து, அதைச் சரிசெய்யும் வழிமுறைகளோடு 2014ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபாம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் தமிழாக்கமே அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம். இந்த அறிக்கை அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளையும், கொள்கைத் தேர்வுகளின் மூலம் அரசாங்கங்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தி, ஒரு நியாயமான உலகை உருவாக்க முடியும் என்பதையும் புள்ளி விவரங்கள் மற்றும் விளக்கப்படங்கள் கொண்டு தெளிவாக விளக்குகிறது. ஒரு நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரம் வளர்ச்சியடைவது, பெண்கள் பொருளாதாரச் சமத்துவத்தை அடைவது ஆகியவற்றுக்கும் ஏற்றத்தாழ்வை ஒழிப்பதற்கும் இடைப்பட்ட உறவை இந்த அறிக்கை ஆய்வு ரீதியாக எடுத்துக்காட்டுகிறது.
Be the first to rate this book.