இந்தத் தொகுப்பு அசோகமித்திரன் எனும் மேதையின் கடல் போன்ற எழுத்துப் பரப்பின் கரையில் சிலர் இணைந்து எடுத்திருக்கும் ஒரு கைப்பிடி மணல். 2014ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று நடந்த ‘அசோகமித்திரனை வாசித்தல்’ என்ற ஒருநாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. என். கல்யாணராமன், அம்ஷன் குமார், பெருமாள்முருகன், ராஜன் குறை, பெருந்தேவி, ராமாநுஜம் ஆகியோரின் கட்டுரைகள் அசோகமித்திரனின் புனைவுலகை வெவ்வேறு கோணங்களில் ஆராய்கின்றன. இதற்கு முன் பரிச்சயமில்லாத சாளரங்களைத் திறக்கக்கூடிய தொகுப்பு இது.
Be the first to rate this book.