தொன்மையான இந்துமதத்தினின்று விலகி உருவான பௌத்தம், தோன்றி மூன்று நூற்றாண்டுகள் கடந்தபின் அசோகரின் தலைமையில் இயங்கிய ஆன்மிக அரசியலில்தான் புத்த மதம் உலகெங்கும் விரிந்து பரவி வேர்கொண்டது. சாணக்கியனிடம் அறமும் நீதியும் கேட்டறிந்த மௌரியப் பேரரசின் அரசு இயந்திரங்கள், அசோகர் காலத்தில் புத்த தர்மத்தை பேணிக்காக்கவும் புத்த மதத்தைப் போற்றிப் பரப்பவும் முடுக்கிவிடப்பட்டன. கலிங்கம் வென்ற மாமன்னன், அசோகர் பௌத்தத்திற்கு மதமாற்றம் செய்யும் பணிகளில் தீவிரமாக இயங்கிய நிலைகளில் துறவுநிலை நீங்கி தீவிர மதப்பற்றுக் கொண்ட மன்னனாக வெளிப்படுகிறார். இந்நூல், ஒரே நேரத்தில் ஆட்சிபீடத்தையும் ஆன்மிக பீடத்தையும் அலங்கரித்த இந்திய மாமன்னர் அசோகரின் வரலாறு மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியும்கூட.
Be the first to rate this book.