கால வரிசைப்படுத்தப்பட்ட அசோகமித்திரனின் கட்டுரைகள், இருபெரும் நூல்களாக வெளியாகியிருக்கின்றன. இது இரண்டாவது நூல். முதல் நூலில் அசோகமித்திரனின் அனுபவங்களும் அபிப்பிராயங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் கலைகளும் கலைஞர்களும். தமிழிலும் பிற மொழிகளிலும் பல்வேறு காலகட்டங்களில் வெளியான முக்கியமான நூல்கள் குறித்தும், ஏராளமான இந்திய, அயல்மொழி எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் வாழ்க்கை குறித்தும் அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகள் இந்நூலின் முக்கியப் பகுதி. நாடகம், சினிமா போன்ற நுண்கலைகள் குறித்த அவரது அக்கறைகள் தனிப்பகுதியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்கின்றன. அசோகமித்திரனின் கட்டுரைகள் ஒருபோதும் குரல் உயர்த்தாதவை. அவரது கதைகளில் காணப்படும் அமைதியும், விலைமதிப்பற்ற எளிமையும் அவரது கட்டுரைகளிலும் காணக்கிடைக்கின்றன. சுமார் நாற்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தமிழ் படைப்புலகில் தீவிரமாக இயங்கிவரும் அசோகமித்திரனின் வயது 73. இவருடைய பல படைப்புகள் இந்திய மொழிகளிலும் பிற மொழிகளிலும் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர் என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார்
Be the first to rate this book.