மணி எம் கே மணி திரைப்படத்துறையில் பணிபுரிகிறார். ஏற்கனவே ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’, ‘டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்’ என்கிற சிறுகதைத் தொகுப்புகளும் ‘மதுர விசாரம்’ என்கிற நாவலும் எழுதியிருக்கிறார். வேறு சில ஆட்கள், எழும் சிறு பொறி, உள்கடல், கடவுளே என்கிறான் கடவுள், பத்மராஜன் திரைக்கதைகள், மேலும் நூறு படங்கள் ஆகியவை இவர் சினிமா பற்றி எழுதிய
புத்தகங்கள். சென்னையில் வசிக்கிறார்.
கதைகள் அனைத்தையும் வாசித்த பின் இந்த எழுத்துகள் யாருக்கானது என எண்ணிப் பார்க்கையில் இதுவரையில் எந்த இலக்கியமும் தங்கள் ஆழ்மனதை உண்மையாகப் பிரதிபலிக்கவில்லை என்று உணர்பவர்களுக்காக எழுதப்பட்டது என்னும் உணர்வு தோன்றுகிறது.
- லதா அருணாச்சலம்
வெறும் சாட்சியாக மட்டுமே கடந்த அசாதாரண நிகழ்வுகளின் தொகுப்பு போல எந்த இடத்திலும் ஒரு விலகல் தன்மை கொண்டவை இவரது கதைகள். ஒவ்வொன்றும் இந்த யதார்த்த உலகில் இருந்தும் அந்த உலகுடன் ஒன்றிணையாத முழுவதும் விலகாமல் ஒட்டிக் கொண்டும் இருக்கிற ஒருவனின் கசப்புகள். இந்தத் தொகுப்பில் அவனது தனிமையை வாசகருக்கு கள்ளாக மாற்றிப் படைத்திருக்கிறார்.
- காளிப்ரஸாத்
Be the first to rate this book.