குறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை படத்தோடு சேர்ந்து வெளியாவதோடு, இவ்வளவு குறைந்த முதலீட்டில்கூட ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா என்று பலர் ஈர்க்கப்பட்டு திரைப்படத்துறையை நோக்கி வரும் முதலீட்டாளர்கள் நாள்தோறும் அதிகரித்துவருகிறார்கள். இது ஒரு நல்ல ஆரோக்யமான சூழல்தான் என்றாலும், படங்கள் வெளிவந்த அளவுக்கு குறைந்த முதலீட்டில் எப்படி திரைப்படங்களை வெற்றிகரமாக எடுத்து முடிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப புத்தகங்கள் வெளியாவதில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமாக உள்ளது. சிறு முதலீட்டுப் படங்களில் முக்கிய பங்கு வகிப்பது, மலிவுவிலையில் கிடைக்கக் கூடிய டிஜிட்டல் கேமிராக்கள் மட்டுமே. அப்படிப்பட்ட கேமராக்கடன் A to Z அலசுவதோடு. இதுபோன்ற காலகட்டத்தில், அதற்காக கூடுதல் வழிகாட்டியும், நம்பிக்கையையும் அளிப்பது போன்று வெளிவருகிறது “அசையும் படம்”.
Be the first to rate this book.