1987-96களில் சமூகப் பொறுப்புள்ள ஒரு பத்திரிகையாளன் எப்படி அலைந்து திரிந்து செய்திகளைச் சேகரித்தார்... அவற்றில் எதை முதன்மைப்படுத்தினார்... எவற்றை, ஏன் நீக்கினார்... என்ற பயணம் இந்நூலில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய ‘டேபிள் ஜர்னலிச , தொலைப்பேசி - வாட்ஸ் அப்’ செய்தி சேகரிப்பில் புழங்கும் பத்திரிகையாளர்களும், அவற்றையே ‘நியூஸ் வேல்யூ’வாகக் கருதும் வாசகர்களும் இதிலிருந்து பாடம் கற்கலாம். கற்க வேண்டும் என்பதுதான் அர்ஷியாவின் விருப்பமும்.
ஏனெனில், பல ஆண்டுக்கால சமூக நீதிப் போராட்டங்களின் விளைவாகக் கிடைத்திருக்கும் சுதந்திரத்தின் தோளில், இப்போது நாம் அமர்ந்திருக்கிறோம் அதை இந்த ‘அசை’ உரக்கச் சொல்கிறது.
- கே.என்.சிவராமன், குங்குமம், முதன்மை ஆசிரியர்
Be the first to rate this book.