மென்மையான இநத அசடன், இந்த உலகத்தை, அதன் சிந்தனைப் போக்குகளை, உணர்வுகளை, இங்கு வாழும் மனிதர்கள் கைக்கொண்டிருக்கும் எதார்த்தத்தை, அவர்கள் காணும் உண்மையை முற்றாக நிராகரிக்கிறான். அவனது உண்மை, அவர்களின் எதார்த்தத்திலிருந்து முழுமையாக வேறுபட்டிருக்கிறது. அவர்களின் எதார்த்தம் அவனது கண்களில் ஒரு நிழலைப் போல மட்டுமே தோற்றம் தருகிறது. முற்றிலும் புதிதான, ஒரு உண்மையான எதார்த்தத்தைக் காண விரும்பி, அதை அவர்களிடம் எதிர்பார்ப்பதினாலேயே அவன் அவர்களின் எதிரியாகிப் போகிறான்
ஏற்கனவே எம்.ஏ.சுசீலா அவர்கள் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தணடனையும்' நாவலை தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார். அது தமிழ் இலக்கிய உலகில் பரவலான வரவேற்பினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தஸ்தயெவ்ஸ்கியின் 'அசடன்' நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார்.
4
Surendran R 12-09-2020 01:40 am