‘ஆரிய திவ்ய தேச யாத்திரையின் சரித்திரம்’ என்னும் இந்நூல் 1885-ம் ஆண்டு வாக்கில், அதாவது 133 ஆண்டுகளுக்கு முன்பு, சேலத்திலிருந்து புறப்பட்டு வட இந்தியா முழுக்கப் பயணப்பட்ட அனுபவத்தை மிகச்சிறப்பாக எழுதியுள்ளார். அன்றைய நாளில் (1885- 1890) என்னவகையான உணவு முறை, என்னமாதிரியான வண்டிகள், என்ன கட்டணம். காசியில், யமுனையில், மும்பையில், டெல்லியில், கல்கத்தாவில் என வடமாநிலங்களில் (அன்றைய தனித்தனியான நாடுகள் போல) மக்களின் வாழ்க்கை முறை, இறை நம்பிக்கைகள், வழிபறிகள், கோவில்களில், பொது இடங்களில், வீடுகளில் பெண்களின் நிலை.. என்று படிக்கப்படிக்க பிரமிப்பும், நாம் என்னமாதிரியான ஒரு வாழ்க்கை முறையைக் கடந்து வந்திருக்கிறோம் என்ற ஆச்சரியமும் ஒருசேர நம்மைப் பிடித்தாட்டுகிறது. நரசிம்மலு அவர்கள்ஆங்கிலேயர்களின் உதவியுடன் அன்றைய நாளில் பாம்பாய் சென்று நூற்பாலைகளைப் பார்வையிட்டு வந்து, கோவையில் நூற்பாலைகளை ஏற்படுத்தியுள்ளார். கோவையை ஒரு தொழில் நகரமாக வடிவமைத்ததில் பெரும்பாங்காற்றியுள்ளார். பயண நூல்களோடு, பள்ளியில் படிக்கும் காலத்திலேயே இலக்கண நூல்களையும் எழுதும் அளவுக்கு தமிழில் புலமை மிக்கவரான நரசிம்மலு நாயுடுவின் இன்னும் சில முக்கிய நூல்கள் மட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
Be the first to rate this book.