அரசியல், பொருளியல், வாழ்வியல், ஆன்மிகவியல், தொழிலியல், தத்துவ இயல் என ஒவ்வொரு துறையிலும் ஆழ்ந்து சிந்தித்தவர் அருட்செல்வர். அவருடைய சிந்தனைகள் அனுபவங்களால் கனிந்தவை. நாடு, சமுதாயம், இளைஞர்கள், எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் ஆற்றிய உரைகளும், எழுதிய படைப்புகளும் வழிகாட்டும் ஒளி விளக்குகளாக அமைந்தவை.
தேசபக்தியில் ஊறிய தலைவர்களோடு பழகிய அரிய வாய்ப்புகளும், அருள்நிதியான ஞானிகளோடு கலந்தும் கரைந்தும் போன அனுபவங்களும், சமுதாய சீர்திருத்தமும் புத்தாக்க எண்ணங்களும் கொண்டவர்களோடு உறவாடிய நெருக்கம் தந்த கருத்தாக்கங்களும், இலக்கிய செல்வர்களோடு மனமினிக்க உளம் சிலிர்க்க மகிழ்ந்திருந்த அற்புத தருணங்களின் படைப்பூக்கங்களும் அருட்செல்வரின் நெஞ்சக் கழனியில் விளைந்து விதை நெல்லாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அவை பலப்பல நூல்களாக வெளிவந்துள்ளன.
அந்த நூல்களையெல்லாம் கூர்ந்து படித்து அவற்றினின்றும் விலை மதிப்புமிக்க மணிகளைத் திரட்டித் தந்திருக்கிறார் முனைவர் க. சிவமணி.
Be the first to rate this book.