அறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தால், நம் தலைமுறையின் கலாச்சார வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். நாற்பதுகளில் தமிழகத்தின் கலாச்சார வரலாறு எப்படி இருந்தது என்பதை நாம் அறிவதற்கு கரன் கார்க்கிக்காகக் காத்திருக்கவேண்டி நேர்ந்துள்ளது.
விலங்குகளைக் காட்டிலும் தாழ்த்தப்பட்டவர்கள் கீழாக நடத்தப்பட்டார்கள் என்பதுதானே சமூக வரலாறு? ஒரு தலித் செருப்பு அணியக்கூடாது, கைக்கடிகாரம் அணியக்கூடாது, பிராமணர்களின் அல்லது ஜமீன்தார்களின் முன்னால் பேசக்கூடாது, சுயமரியாதையுடன் வாழக்கூடாது, எதிர்ப்பைத் தெரிவித்தால் குடிசைகள் எரிக்கப்படும். ஆதிக்கவாதிகளின் போலியான சமூக விழுமியங்களை இவ்வளவு வெளிப்படையாகத் தோலுரித்த நாவல் அண்மைக் காலத்தில் எழுதப்படவில்லை.
- பா. இரவிக்குமார்
Be the first to rate this book.