உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? நிலவுகள் உடைந்த இரவுகளில் பனியோடு இருளில் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறீர்களா? அதில் வருத்தம் இல்லை. கண்ணீர் இல்லை. நீங்கள் ஒரு உலர்ந்த இலையைப் போல காற்றில் மிதந்து செல்கிறீர்கள். இந்தக் கவிதைகள் எவ்வாறு வாழ்வின் கிளைகளோடும் மலர்களோடும் தன்னை விடுவித்துக்கொண்டன என்பதன் சாட்சியம்தான் இந்தத் தொகுப்பு. உடைந்த நிலவாகவோ உதிர்ந்த நிலவாகவோ தன்னை உருவகித்துக் கொள்வது ஒரு மனிதனுக்கு சந்தோஷமான விவகாரம் அல்ல. ஆனால் ஒரு கவிஞனுக்கு அந்த துக்கம் தரும் இதமும் பரிவும் அவ்வளவு தேவையாக இருக்கிறது.
Be the first to rate this book.