அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் அரசியல், பொருளாதாரக் கையேடு. அறம், பொருள், இன்பம் மூன்றையும் விரிவாக விவாதிக்கும் இந்தப் பண்டைய ஆவணத்தில் இருந்து செல்வம் பற்றிய பகுதிகளைப் பிரித் தெடுத்து அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
இன்றைய வர்த்தக உலகம் தெரிந்துகொள்ளவேண்டிய ஆச்சரிய மூட்டும் உண்மைகள் பல இதில் உள்ளன. உதாரணத்துக்கு:
* சந்தையை எப்படி நிர்வகிக்கவேண்டும்? வர்த்தகம் எப்படி நடத்தப்படவேண்டும்?
* வியாபாரிகளுக்கு இடையில் தோன்றும் போட்டிகளை எப்படிச் சமாளிக்கவேண்டும்?
* விலையேற்றத்தைச் சமாளிப்பது எப்படி? இழப்புகளைத் தவிர்ப்பது எப்படி?
* அரசுக்கும் தனியார்களுக்கும் இடையிலான உறவு எத்தகையது?
* ஓர் ஆட்சியாளரின் கடமைகள் என்னென்ன? எது நல்ல ஆட்சி?
இப்படி அர்த்தசாஸ்திரம் விவாதிக்கும் ஒவ்வொரு பொருளாதார, அரசியல், ஆட்சி நிர்வாக அம்சமும் இன்றும் நமக்குப் பொருத்தமாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு ஒரு நாட்டையும் அதன் முதுகெலும்பாகத் திகழும் வர்த்தகத்தையும் எப்படி நிர்வகிக்கவேண்டும் என்பதை விரிவாகவும் நுணுக்கமாகவும் அலசி ஆராய்கிறது. அர்த்தசாஸ்திரம் ஏன் இன்றும் நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பதற்கான காரணம் இதுதான்.
செல்வத்தின் அறிவியல் என்று புகழப்படும் அர்த்தசாஸ்திரம் குறித்த மிக எளிமையான அற்புதமான அறிமுகத்தை இந்நூலில் வழங்கியிருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் தாமஸ் டிரவுட்மன்.
இந்திய வர்த்தக வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இது ஓர் அத்தியாவசியத் தொடக்க நூல்.
Be the first to rate this book.