"விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது” என்று இயேசு சொல்கிறார். இதில் அவர் கோடி விஷயங்களைச் சொல்லிவிடுகிறார். நீதிக்கதைகளின் அழகே அதுதான். நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷயங்களைச் சொல்லிவிட முடிகிறது.
விதை மடிந்தால் பிரபஞ்சம் இருக்கிறது; மரம் இருக்கிறது. இதுதான் கடவுளின் பேரரசு. இதுவே விண்ணரசு. அதை எங்கோ தேடுகிறீர்கள்; வேதனைப்பட்டுத் தேடுகிறீர்கள்.
கடவுளின் பேரரசை நீங்கள் காண விரும்பினால், நீங்கள் விதையாக மாறி அழியவேண்டும். அப்போது சட்டென மரம் தோன்றிவிடும். நீங்கள் இருக்கமாட்டீர்கள். ஆனால், கடவுள் இருப்பார்.
Be the first to rate this book.