நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது!
நீங்கள் விரும்புகின்றவற்றைக் கைவசப்படுத்துவதற்கு, உங்களுடைய சொந்த ஆளுமைக்குள் துயில் கொண்டிருக்கின்ற அந்த அற்புத சக்தியை விழித்தெழச் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்!
தொழில்முனைவோர், மருத்துவர்கள், இராணுவ வீரர்கள், கலைஞர்கள் போன்ற, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள், வெற்றிகரமான ஆளுமையின் அற்புத சக்தியின் வாயிலாகத் தங்கள் இலக்குகளை அடையவும், தங்கள் வெற்றிக்குக் குறுக்கே நிற்கும் தடைகளைத் தகர்த்தெறியவும், தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை வாழவும் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
உங்களாலும் அவர்களில் ஒருவராக ஆக முடியும்!
உலகப் புகழ் பெற்ற நூலாசிரியரும், வெற்றிக்கான இரகசியங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்குக் கற்றுக் கொடுத்த ஆசானுமான நெப்போலியன் ஹில், அதற்கான வழிகளை இந்நூலின் வாயிலாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்க வருகிறார்.
நெப்போலியன் ஹில், 1883ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள விர்ஜீனியா மாநிலத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஹில் தன்னுடைய இளம் வயதிலிருந்தே, ஆன்ட்ரூ கார்னகி, தாமஸ் எடிசன், அலெக்சான்டர் கிரகாம் பெல் போன்ற மாபெரும் சாதனையாளர்களைப் பற்றிக் கற்றறிந்தார். வெற்றி அறிவியலில் குறிப்பிடத்தக்கதொரு சிந்தனையாளராகவும் வல்லுநராகவும் அவர் உருவெடுத்தார். மகத்தான சாதனைகளைப் படைத்த ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’ என்ற புத்தகம் 1937ல் வெளியானது. இது கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுவரை இந்நூல் 7 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. அவர் ஒரு மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும்கூட. அமெரிக்கா நெடுகிலும் பயணம் செய்து வெற்றிக் கொள்கைகள் குறித்து எண்ணற்ற ஊர்களில் பேசி இலட்சக்கணக்கானோரை அவர் ஊக்குவித்துள்ளார். 1962ல் அவர் ‘நெப்போலியன் ஹில் அறக்கட்டளை’யை நிறுவி, தனது கொள்கைகள் என்றென்றும் தழைத்திருக்க வழி வகுத்தார். 1970ல் தனது 87வது வயதில் அவர் காலமானார்.
Be the first to rate this book.