ஆரோக்கிய நிகேதனம்' என்பது மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்துவரும் குடும்பத்தவரது மருத்துவ நிலையம். அது சிதைந்த நிலையில் உள்ளது. ஆரோக்கிய நிகேதனத்தை நிறுவிய ஜகத்பந்து மாஷாய்-யின் மகன் ஜீவன் மாஷாயின் வயோதிப காலத்தில் கதை ஆரம்பித்து அவரது முன்னைய தலைமுறை, இளமைக்காலம், அவரது மகன் என கதை விரிவடைகிறது.இவர்கள் நாடி பிடித்து ஆயுள் சொல்லக்கூடியவர்கள், ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றுபவர்கள். அந்த காலத்தில் பிரபலமகி வந்து கொண்டிருந்த ஆங்கில மருத்துவம், நாட்டு வைத்தியம் தொடர்பாக மக்களது அபிப்பிராயங்கள், பரம்பரையாக மருத்துவத்தை தந்தையிடம் பயிலும் போது எடுக்கும் சிரத்தை, ஆங்கில மருத்துவத்தில் கொண்டுள்ள மோகம், ஆங்கில மருத்துவம் படிப்படியாக மக்களிடம் அறிமுகமாகிய முறை என பலவற்றை பற்றி நாவல் சொல்கிறது.
5
இன்னும் சில வருடங்களில் 60ஐ தொட்டு விடுவேன். இந்த குறுகிய கால வாழ்க்கையில் ஓரளவு புத்தகங்களை தேடிப்பிடித்து படித்துள்ளேன். ஆரோக்கிய நிகேதனில் நான் வாழ்ந்தேன் என்று தான் கூறவேண்டும். மறக்க இயலாத மனிதன் மஷாய். இனி மரணம் குறித்த எந்த சஞ்சலமும் இல்லை. காலா என் அருகே வாடா
Chitra Sampath 12-12-2020 02:52 pm
5 Classic
முழு வாழ்வையும் சொல்லிச் செல்லும் செவ்வியல் இலக்கியப் புனைவுகள் எல்லாமே மனதை என்னவோ செய்துவிடுகின்றன. மனதை அமைதிக்குள் அல்லது நிதானத்திற்குள் தள்ளி (சலனப்படுத்தி?), வாழ்வு பற்றிய/வாழ்வின் அர்த்தம் (வாழ்விற்கு அர்த்தம் என்று ஏதாவது உண்டா?) பற்றிய வினாக்களை உண்டாக்கி, ஏதோ ஒரு வெற்றிடத்தை உள்ளே உணரச்செய்து இனம்புரியாத கவலையை(?) உண்டாக்குகின்றன. மொத்த வாழ்வையும் பார்க்கும்போது இவ்வாழ்வின் நிரந்தரமின்மையும், குமிழ்களின் ஆட்டங்களும், சந்தோஷங்களும், கவலைகளும், இலட்சியங்களும், முழுமையை பார்க்க முடியா அதன் இயல்புகளும் கேள்விகளை அடுக்கடுக்காக கிளப்பியவண்ணமே இருக்கின்றன.
Vengadesh 08-10-2017 04:35 pm