தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. ‘சிறு தெய்வம்’ என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெயர் வழக்கு ‘மேலோர் மரபு’ சார்ந்ததாகும். வழிபடும் மக்களுக்கு இவை தெய்வங்களே.
சிறுதெய்வங்கள் எனச் சுட்டப்படுவனவற்றின் அடிப்படையான அடையாளங்கள் அவற்றைப் பிராமணர் பூசிப்பதில்லை என்பதும், அவை இரத்தப் பலி பெறுவன என்பதும் தாம். ‘பலி’ என்பது வடமொழிச் சொல். படைக்கப்படுதல் என்பது அதன் பொருள். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறுதெய்வங்கள் உள்ளன. சிறுதெய்வக் கோயில் இல்லாத கிராமமே இல்லை எனலாம். இவற்றில் செம்பாதிக்குமேல் தாய்த் தெய்வங்கள்.
Be the first to rate this book.