கிராமப்புறங்களில் கல்வி விரிவாக்கத்தின் மீது கலாச்சாரப் புரட்சியின் போது கல்விச் சீர்திருத்தங்களின் தாக்கம் மற்றும் அந்தக் காலகட்டத்தின் பொருளாதார வளர்ச்சியுடன் அதன் தொடர்பு குறித்தும் நான் ஆய்வுசெய்ய முடிவு செய்தேன்.
கலாச்சாரப் புரட்சியின் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து நான் ஆய்வு செய்யத் தொடங்கியபோது, அந்தச் சீர்திருத்தங்கள் கிராமப்புற வளர்ச்சியின் ஒருங்கிணைந்த திட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டேன். கலாச்சாரப் புரட்சியின் பத்தாண்டுகளின் போது கிராமப்புற அரசியல் கலாச்சாரத்தில் மாற்றங்களையும், விவசாயத்தை முன்னேற்றவும் கிராமப்புற தொழில்துறையை வளர்க்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளையும் எனது ஆய்வில் சேர்த்துக் கொள்ளும் வகையில் வாய்ப்பெல்லையை நான் விரிவாக்கிக் கொண்டேன்.
இந்தப் புத்தகத்தில் நான் முன்வைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் கல்விச் சீர்திருத்தம், அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி ஆகியவை நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தன என்ற முடிவுக்கு வருகிறேன்.
- டாங்பிங் ஹான்
Be the first to rate this book.