அறிவுத்தோற்றவியல் (Epistemology) குறித்துத் தமிழில் விரிவாக ஆய்வுகள் இல்லை. தோழர் சி.மகேந்திரன் தமிழர்களின் அறிவுகுறித்த புரிதல், சிந்தனைகள், கருத்துகள் என்று பல்துறை சார்ந்த அறிவுருவாக்கம் பற்றி இந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.
இந்தியாவெங்கும் சமஸ்கிருதம் வழியாகவே அறிவு உருவாக்கப்பட்டது என்பதை நூலாசிரியர் மறுக்கிறார். தமிழ் மரபிலிருந்து, அறிவுத்தோற்றவியலை விளக்க முற்படுகிறார். இது தனித்துவமிக்க வழிகாட்டுதல் என்பேன். பல நூற்றாண்டுகளின் தமிழரின் அறிவுத்தொடர்ச்சி இன்னமும் அறியப்படாமலே இருக்கிறது என ஆதங்கப்படும் இவர், தனது ஆய்வுநூலின் வழியே அக்குறையைத் தீர்க்க முயன்றிருக்கிறார்.
- எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.