வரலாற்றில் சகல அறிவியல் துறைகளுக்கும் முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்புக்கள் பற்றி இந்த நூல் ஆராய்கிறது. முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தவர்கள் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டு, மர்வான் இப்னு ஹகம் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஆட்சி மாறிய போது முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தவர்கள் அரசியலைவிட்டு ஒதுங்கி "மொழிபெயர்ப்புத் துறைக்கு" பங்களிப்பு வழங்கிவந்தார்கள்.
அதே போன்று ஹஜ் கடமைக்காக ஒன்று கூடிய அறிஞர்கள் தமது புதிய கண்டுபிடிப்புக்கள் பற்றி கலந்துரையாடும் மாநாட்டையும் வருடாந்தம் ஒழுங்கு செய்திருந்தார்கள் போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் இதில் அடங்கியுள்ளன. அல்பிரூனி, ஸகரிய்யா அல் ராஸி ஆகியோரின் ஆழமான பங்களிப்புக்கள் பற்றியும், பக்தாத் நிழாமிய்யா பல்கலைக்கழக்த்தின் சேவைகள் பற்றியும் இந்த நூல் விரவாக ஆராய்ந்திருக்கிறது.
Be the first to rate this book.