நவீன உலகின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் என்ற கருத்து தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், அறிவியலின் இயல்பு, அதாவது உண்மையிலேயே அறிவியல் என்றால் என்ன என்பது பிடிபடாமல்தான் இருக்கிறது. பொதுவாக, அறிவியல் என்பது உண்மை, ஏரணம், பகுத்தறிவு, புறவயத்தன்மை, அறிவு, மேதைமை போன்ற உள்ளடக்கங்களோடு தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், இப்படியான நம்பிக்கைகளெல்லாம் உள்ளபடியே எந்த அளவுக்கு உண்மையானவை? ஆக, இந்தப் புத்தகம் அறிவியல் குறித்துத் தத்துவார்த்தரீதியாகச் சிந்திப்பதற்கான வழியை ஏற்படுத்தித்தருகிறது. அறிவியலைப் புரிந்துகொள்வதற்கான சில இந்தியச் சிந்தனைச் சட்டகங்களையும் அறிமுகப்படுத்துகிறது. அறிவியலைப் பின்னணியாகக் கொண்டு, ஏரணம் முதல் அறம் வரை என விரிவான தளங்களைக் கையாள்கிறது. இவற்றோடு, முக்கியமான சில தத்துவக் கருத்தாக்கங்களுக்கும் அறிவியல் கருத்தாக்கங்களுக்கும் சுந்தர் சருக்கை அளித்த எளிமையான விளக்கங்கள் இங்கே சேர்க்கப்பட்டுள்ளன; இது தமிழ்ப் பதிப்பின் கூடுதல் சிறப்பம்சமாகும். அறிவியலை அதன் சிக்கல்களோடும், அதன் பலம் மற்றும் பலவீனங்களோடும் புரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான புத்தகம் இது!
1. அறிவியலை வரையறுத்தல்
2. அறிவியல் செய்தல்
3. அறிவியலும் ஏரணமும்
4. அறிவியலும் மெய்ம்மையும்
5. அறிவியலும் அறிவும்
6. அறிவியலும் மானுட எழுவாயும்
7. அறிவியலின் வெற்றிகளும் போதாமைகளும்
பின்னிணைப்பு: கருத்தாக்கங்கள் - சுந்தர் சருக்கை
5 A must read book about philosophy of science
Those who wish to see a world where science is democratized should read this book
Yaswanth 06-01-2025 07:43 pm