ஆளுமைச் சிலையை வடிக்க அறிஞர்களின் அறிவுரை உளியைத் தேடி எடுத்தோம்; வடித்தோம். நீங்கள், ஓங்கி உன்னதமாய் விளங்கிட இச்சிறு புத்தகம் ஒரு துடுப்பாய் அமைந்திடும். இம்முயற்சிக்கு வித்திட்ட, உரமிட்ட, மாநில பள்ளிசாராக் கருவூலத்தின் கல்வி மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கும், இக்கருவூலம் என்றும் சுடர் விட்டெரிய சதையாலும் நரம்பாலும் மூடியுள்ள இதயத்தைத் திறந்து காவலனாய் புரவலனாய் என்றும் விளங்கும் பெருந்தலைவர் டாக்டர் கே. கோவிந்தராஜு அவர்களுக்கும் ஈரைந்து விரல்களை அணி சேர்த்து நன்றி செலுத்துகின்றேன். ஒரு மரத்தில் எத்தனை பழங்கள் உள்ளன என்று எண்ணிவிடலாம். ஆனால், ஒரு பழத்தில் எத்தனை மரங்கள் உள்ளன என்று என்னால் சொல்ல வியலாது. அதுபோன்று ஒருவரிடம் மறைந்து கிடக்கும் திறன்கள் அதிகம்.
Be the first to rate this book.