கடவுள் நம்பிக்கை அற்றவர். தீவிரவாதத்தில் நாட்டம் கொண்டவர். நாட்டு விடுதலைக்காக பேனா முனையில் புரட்சி செய்தவர். விடுதலைப் போராட்டங்களில் தலைமை தாங்கியவர். வெடிகுண்டு வழக்கில் சிக்கி சிறைவாசம் பெற்றவர். இப்படித்தான் இருந்தது அரவிந்தரின் ஆரம்ப வாழ்க்கை.
இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர். மகா யோகி. ஆன்மிக நெறியின் மூலம் மனித குலத்தின் விடுதலை பற்றி சிந்தித்தவர், யோகம் பற்றி போதித்தவர், ஆன்மிகக் காவியங்களைப் படைத்தவர் என்று உலகம் போற்றும் மகானாக பின்னர் அரவிந்தர் மாறிப்போனது எப்படி?
இருவேறான பாதைகளில் சங்கமித்த அரவிந்-தரின் வியப்புக்குரிய வாழ்க்கைப் பயணத்தை சிலிர்ப்புடன் விவரிக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.