இவை அன்பு வயப்பட்ட கதைகள், அதே சமயம் அறத்தின் பாற்பட்ட கதைகள். காதல், கல்யாணம், கள்ளம் என மும்முனையிலும் முயங்கி இயங்கும் ஆண் - பெண் உறவுச் சிடுக்குகள், பட்டு வஸ்திரம் ஒன்றைத் தறியில் நூல் நூலாகக் கோத்து நெசவு செய்து எடுப்பது போல் இந்தப் புனைவாக்கங்களில் நேர்த்தியாகச் சேகரமாகி இருக்கின்றன. நல்லதுக்கும் அல்லதுக்குமான தீராச் சமர் அவற்றில் ஊடுபாவாக இழையோடுகிறது. எப்போதும் தீமையின் கண் கூசும் வெளிச்சம் விட்டில் பூச்சிகள் விரும்பி விழுமளவு வசீகரமானதுதான். ஆனால் அறத்தின் சிற்றொளியே மானுடத்தை வழிநடத்துகிறது. அதை அணையாது உள்ளங்கைக்குள் பொத்திக் காக்க எத்தனிக்கின்றன இக்கதைகள்.
Be the first to rate this book.