முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் மிகவும் முற்றுமுழுதான ஒன்றினைத் திரு. லாஸ்கி கண்டிப்பாக உருவாக்கியுள்ளார். லாஸ்கியின் முந்தைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ள அறிவும் நிபுணத்துவமும் முழுமையாக இதிலும் வெளிப்படுகின்றன. அன்றியும் இது அதிக அளவு மானிட நோக்கிலும் மகிழ்வூட்டும் போக்கிலும் எழுதப்பட்டுள்ளது. நேர் வெளிப்பாட்டிலும், கருத்துரைகளிலும் நிதானத்தன்மையுடன், இது நவீன அரசியலின் இடர்ப்பாட்டினை எடுத்துக் காட்டுகிறது. ஆயிரமாம் ஆண்டுக்கான சுருக்குவழிகளைச் சிந்தனை வறுமையை மூடுகின்ற போர்வைகள் எனவும் அலங்கார வெளிப்பாட்டிற்கான கருவிகள் எனவும் இந்நூல் வெறுத்து ஒதுக்குகிறது; இருப்பினும் தனது சூழலின் கனத்தை ஓர் அவசர உணர்வோடு தருவதில் வெற்றிபெறுகிறது.
Be the first to rate this book.