தேசப் பிரிவினையின் காரணமாக இந்திய முஸ்லிம்கள் பல துறைகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டார்கள். அதில் பிரதானமானது அரசியல் களமாகும்.
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களை அரசியல் களத்திலிருந்து அகற்ற, அவர்களுக்கு அதுகாறும் வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு அநியாயமாக பறிக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பதிவுடன்,
தமிழக முஸ்லிம்களின் அரசியல் செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக ஆய்வு செய்கிறது இந்நூல்.
முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கொள்கைகள், பலம், பலஹீனம் ஆகியவற்றை திறம்பட விமர்சனம் செய்துள்ளதுடன், பிற அரசியல் கட்சிகளுடனான
அவர்களுடைய உறவையும் மற்றும் விகிதாச்சார பிரதிநிதித்துவ அரசியல் குறித்தும் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.
Be the first to rate this book.