சிந்தன் முன்மொழிகிற படங்கள் பட்டவர்த்தனமாய் அரசியலைப் பேசுகின்றன. நீங்கள் குடிக்கும் காபியில்.. உங்கள் கையிலிருக்கும் செல்போன் களில்.. உங்கள் குழந்தைகள் ருசித்து சாப்பிடும் சாக்லேட்டுகளில்.. நீங்கள் குடிக்கும் தண்ணீரில்.. குடும்பத்துடன் நீங்கள் உலாவரும் அயல்நாட்டுக் காரில்... என ஒவ்வொன்றின் பின்னாலும் ஒளிந்திருக்கும் அரசியலை இந்தப்படங்கள் உங்களிடம் பேசுகின்றன. படிக்கப்படிக்க மனம் பதைக்கிறது.
இந்த புத்தகத்தைப் படிப்பவர்கள் நிச்சயம் அந்தப் படங்களைக் கண்டடைந்து பார்த்துவிடுவார்கள். அதற்கான தூண்டலை, அந்தப் படங்கள் அல்ல.. அவை பேசும் அரசியலே செய்துவிடுகின்றன. அதற்கு சிந்தனின் எழுத்தும் ஒரு காரணமாக இருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு.
Be the first to rate this book.