நீண்டகாலமாகத் தமிழ் சினிமாக்களில் நிலவிவரும் சாதிய, மதவாத, ஆணாதிக்க, பெருந்தேசிய அதிகாரக் கூறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அதேநேரத்தில் சமீபமாக அரசியல் சினிமாக்கள் தமிழில் அதிகரித்துவரும் சூழலின் முக்கியத்துவத்தைக் கவனப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு. எம்.ஆர்.ராதா முதல் குஷ்பு வரையிலான ஆளுமைகள் குறித்த தனித்த பார்வைகளை முன்வைப்பதுடன் தேர்தல் அரசியல் களத்தில் நுழையும் ரஜினி, கமல் என்னும் இரு உச்ச நட்சத்திரங்களின் சினிமாக்களுக்கு உள்ளும் வெளியுமான அரசியலை ஆராயும் கட்டுரை உள்ளிட்ட விரிவான தளம் கொண்ட புத்தகம்.
Be the first to rate this book.