அற வழியில் பொருள் ஈட்டி இன்பம் காண்பது மனிதனின் இயல்பு. அறம், பொருள், இன்பம் மூன்றும் வாழ்க்கைக்கு முக்கியமானவை. இதில் ஒன்றில் முறையான திட்டமிடல் இல்லாவிட்டாலும் அடிப்படையான வாழ்வாதாரமே அசைவு கண்டுவிடும். முதலில் அறம் செய்தல். தான் தேர்ந்தெடுத்த தொழில், அல்லது திட்டம் ஆகியவற்றில் கண்ணியமாக செயலாற்றுவதும் அதன்வழியில் பொருளீட்டலும் அதை வீணாக செலவழிக்காமல் காப்பதினால் பிற்காலத்தில் இன்பமாய் வாழலாம். இதில்தான் சிக்கலே. இந்த சிக்கலுக்கான விடையாகவே அமைகிறது இந்த நூல்.
உழைப்பு, முறையான திட்டமிடல், சேமிப்பு, முதலீடு, காப்பு ஆகியவற்றில் அரசு, வங்கி அமைத்துக் கொடுத்திருக்கும் திட்டத்தில் சேர்ந்து தங்களது உழைப்பையும் சேமிப்பையும் காப்பீடுகளால் தங்களை காத்துக்கொள்ளும் வழிகள் ஏராளம் உண்டு. எவ்வளவு சேமிப்பது, எப்படித் திட்டமிடுவது? எங்கு முதலீடு செய்வது? கைநிறைய சம்பாதித்தும் சேமிப்பு இல்லை... சேமித்தாலும் அதை வெகு நாட்கள் காக்க முடிவதில்லை... இதற்கான திட்டங்கள் என்னென்ன? என்.ஆர்.ஐ., கணக்கு தொடங்க முடியுமா? கடன் வாங்கி வீட்டு மனை வாங்குவது சரியா? தங்கம் ஒரு சேமிப்பா? ELSS திட்டத்தில் நாம் முதலீடு செய்வதால், என்ன ஆதாயம்? நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? `பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ என்றால் என்ன? இதுபோன்ற அநேக புதிய திட்டங்கள், சந்தேகங்கள், குழப்பங்கள் ஆகியவற்றுக்கு தெளிவான விளக்கம் தருகிறது இந்த நூல்.
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த `அறம் பொருள் இன்பம்' நூல் வடிவில், இப்போது உங்கள் கைகளில். உழைத்து, திட்டமிட்டு, சேமித்து, முதலீடு செய்து காப்பீட்டில் பதிவாகி ஆயுள் காக்கும் உறுதியான வாழ்வாதாரத்தைப்பெற இந்த நூல் நிச்சயம் கைகொடுக்கும்.
Be the first to rate this book.