கலையில், இலக்கியத்தில், தொழில்நுட்பத்தில், விவசாயத்தில் மொத்த சிந்தனையில், பிறநாடுகளில் என்னென்ன நிகழ்கின்றன. என்ற செய்திகள் தமிழில் வெளிவரவேண்டியது மிகவும் அவசியமாகிப் போகிறது. இந்த அவசியத்தை உணர்ந்ததின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நூல். நாம் ஜன்னல்களைத் திறந்து வைப்போம். புதிய காற்றும், வெளிச்சமும் உள்ளே வரட்டும் நீக்ரோ மக்களுக்கே உரிய சிந்தனைத் திருப்பங்கள், கற்பனை, சொல்லாட்சி, நகைச்சுவையும் அவலமும் கலந்த தனிச்சுவை ஆகியவை திறம்பட வெளிப்படலாயின.
ஆனால் ஆப்பிரிக்கா என்பது ஒருகோடி பதினேழு இலட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்டது. உலகிலேயே பெரிய கண்டம், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வெவ்வேறு குழு மக்களைக் கொண்டது. இந்த கண்டத்தில் மேற்பட்ட வெவ்வேறு குழு மக்களைக் கொண்டது. இந்த கண்டத்தில் மட்டும் சுமார் 2400 மொழிகள் வட்டார மொழிகள் என்பது பொருத்தும் வழக்கில் உள்ளன. இதுமட்டும் அல்லாமல் பிரான்சின் பாரீசிலும் அமெரிக்காவின் ஹார்லம்மிலும் வாழ்கிற கருப்பு எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வேறு உள்ளன.
Be the first to rate this book.