• 2007 ஆண்டுவரை எழுதிய அனைத்துக் கவிதைகளின் முழுத்தொகுப்பு
குழப்பத்தாலும், கலவரத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்ட நவீன மனிதர்களில் ஒருவனாகத்தான் நானும் இருக்கிறேன். இந்தக் கவிதைகளைப் படித்த பிறகு என்னுடைய இடத்தில் நீங்களும் நிற்பதாக உணர்ந்தால், நமக்குள் ஒரு உரையாடலைத் தொடங்க முடியும். “ஆதியில் ஒரு வார்த்தை இருந்தது” என்று தொடங்கப்பட்டது போல புத்தம் புதிதான ஓர் உரையாடலை, நம் மனங்களின் அடியாழத்திலிருந்து தொடங்கவேண்டும். நிறைய காயங்களால் நிரம்பிய நம் இருண்ட உள் உலகங்களை வார்த்தைகள் ஓங்கி உச்சரிக்க வேண்டும். பரஸ்பரம் நம் இருவருக்கும் இடையில் ஒன்றுமில்லை என்று தொடங்க வேண்டும். ஒன்றுமில்லை என்பதை ஆழ்ந்த காதலாக மாற்ற வேண்டும். ஒன்றுமில்லை என்கிற அளவிலாவது காப்பாற்ற முடியுமா? காத்திருக்கிறேன்.
- சமயவேல்
Be the first to rate this book.