பிற மொழிகளுடன் தமிழ் மொழி கொண்ட மொழியியல் உறவு விரிவாக ஆராயத்தக்க ஒன்று.
சமஸ்கிருதம், அறபு, பாரசீகம், துருக்கி, உருது, ஆங்கிலம், பிரெஞ்ச், தெலுங்கு முதலிய மொழிச்சொற்கள் தமிழோடு ஒன்றாக கலந்திருக்கின்றன. மேற்கொண்ட மொழிகளுக்கு கடனளிக்கும் மொழியாகவும் தமி்ழ விளங்கியிருக்கிறது.
தமிழகத்தோடு அறேபியர் கொண்ட உறவை இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன், பின் என இருவகைப்படுத்தலாம். அதற்கு முன் வணிக உறவே முதன்மையானதாக இருந்தது. இஸ்லாம் நுழைந்ததும் மதரீதியிலான மொழி அடையாளம் வலுப்பட்டது; அறபியைத் தமிழ் முஸ்லிம்கள் இன்முகத்தோடு வரவேற்றனர். அறபு, தமிழ் முஸ்லிம்களின் அடையாளமாக மாறியது. முஸ்லிம்களின் வழக்கில் செல்வாக்குபெற்ற அம்மொழி, தமிழோடு இணைந்து உருவாக்கிய வடிவம் ‘அறபுத்தமிழ்’.
அந்தவகையில் அறபும் தமிழும் கொண்ட மொழியியல் உறவு பற்றிய நூல்தான் காலச்சுவடு வெளியீடாக த. சுந்தரராஜ் எழுதியிருக்கும் ‘அறபும் தழிழும்’. அறபு - தமிழ் மொழிகளுக்கான உறவையும் அறபின் ஒலியைத் தமிழில் பெயர்க்கும் முறையையும் ஒப்புநோக்குகிறது இந்நூல்.
Be the first to rate this book.