அரபு இசை மத்தியக் கிழக்கில் மட்டுமன்றி உலக அளவிலும் பெரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஒவ்வொரு இனத்திறகும் ஒவ்வொரு இசை மரபு இருப்பது போல அரபு இனத்திற்கும் அந்தச் சிறப்பு உண்டு. நாம் அனுபவிக்கும் கஸ்ல், கஸீதா, கல்வாலி போன்ற இசை மரபுகளின் தோற்றமும் அரபு இசையுடன் தொடர்புடையது. முஸ்லிம் இசை மரபுகளின் ஆதார ஊற்று என்னும் வகையிலும் அரபு இசையின் பங்கு முக்கியமானதாகும். இந்தப் பின்னணியை மையப்படுத்தி, அரபு இசையின் வளர்ச்சியையும் உலக இசை மரபில் அதன் செல்வாக்கையும் விளக்குகிறது இந்நூல்.
இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தில் அரபு இசை தோன்றியதிலிருந்து இஸ்லாமிய நாகரிக வரலாற்றில் அதன் செல்வாக்கையும் விளைவுகளையும் இந்நூல் ஆராய்கிறது.
மத்திய, தென்கிழக்கு ஆசியாவில் பரவிய அரபு இசை இந்தியாவில் அதன் செல்வாக்கை எவ்வாறு செலுத்துகிறது? இதன் தாக்கத்தைத் திரைப்படங்களில் பின்னணி இசை, பாடல் வழியாக எப்படி உணரலாம்?
இதுபோன்ற கேள்விகள் மூலம் அரபு இசையின் தோற்றத்தையும் அதன் பரந்த வீச்சையும் தமிழ் வாசகர்களுக்கு விவரித்து, தன்னை முதல் நூலாக நிருவிக்கொள்கிறது.
Be the first to rate this book.