பெண்கள் எழுதலாமா, அதுவும் புனைவினை எழுதலாமா, எழுதுவதாக இருந்தால் அவர்கள் என்னென்னவெல்லாம் வரையறைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும் என்பது போன்ற ஆண்களின் அதிகாரக் கட்டளைகளை மீறி தைரியமாக எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. இந்தக் கதைகளை எழுதியதால் தண்டனைகளுக்கானவர்களினதும், நாடு கடத்தப்பட்டவர்களினதும், சிறையில் அடைக்கப்பட்டவர்களினதும் படைப்புகள் இவை.
எழுதுவதற்கு எல்லாச் சுதந்திரமும் உள்ளவர்கள் எழுதுவதைப் போன்றதல்லவே எழுதத் தெரிந்தவர்களின் விரல்கள் சிதைக்கப்பட்டு, எண்ணங்கள் முறிக்கப்பட்டு, முகத் திரைகளின் பின்னால் மறைந்து கொள்ளச் செய்யப்பட்டவர்களின் எழுத்து!ஆகவேதான் இந்தக் கதைகளும் அவர்களது அந்த வலிகளையும், இரகசியங்களையும், ஆசைகளையும், சுதந்திர வேட்கைகளையும் எடுத்துரைக்கின்றன.
- எழுத்தாளர் சல்மா
5 ஒற்றை காலில் வாழ்க்கையை விளையாடுவதுதான் பெண்களுக்கான நியதி!!
பெண்களை அடக்கி, தனது கட்டுபாட்டுக்குள் என்றென்றைக்குமே வைத்திருக்க துடிக்கும் இந்த ஆணாதிக்க சமூகத்தின் முகமூடியை கிழித்து, அதன் கோரமான முகத்தை காட்டும் 18 பெண் எழுத்தாளர்களின் 25 சிறுகதைகள். நிச்சயம் படிக்க வேண்டும்.
Abdul Rahman 20-01-2024 03:55 pm
5
Mohammed Shareef Mohammed Rishan 17-01-2024 11:35 am